Monday, December 10, 2007

தருமத்தில் சிறந்தது யாதென்று கேட்டால்.......

ஒரு மனிதன் மிகவும்நல்லவன்.ஆனால் மிகவும் ஏழை..நிறைய தானதருமங்கள் செய்யவேண்டும் என்று அவருக்கு விருப்பம் உண்டு. ஆனாலும் அவருக்கு செய்வவதற்கு பொருள் இல்லை.அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.உலகில் தானதருமங்கள் செய்தால்தானே நல்லபுண்ணியம் கிடைக்கும் என்று உலகத்தார்சொல்கிறார்கள்;நம்மால் யாருக்கும் எதுவும் செய்ய இயலவில்லையே என்றுவருந்தி ,புண்ணியஸ்தலங்களுக்காவது சென்று வருவோம் என்று ஊர் ஊராகாச்சென்று வரலானார்.இப்படியாக ஒருநாளிரவு ஒரு கோவில் வாசலில்உறங்கிக்கொண்டிருந்தார்.அப்போது ஒரு கனவு கண்டார்.அவரது கனவில் பெரியவர் ஒருவர் கம்பீரமான உருவத்துடன் வலதுகையில் எழுத்தானியும்இடதுகையில் ஓலைச்சுவடியுமாகக் காட்சியளித்தார்.பெரியவர் அவரைக்கண்டதும் கடவுளே தன்முன் வந்துவிட்டது போல் ஒரு உணர்வு.இரு கரம் கூப்பி வணங்கினார்.கனவில் வந்தவர் முதியவரை நோக்கி"உன் மனதில் என்னப்பா தீராதகவலை"என்றார்.அதற்கு முதியவர்"ஐயா என்னால் யாருக்குமே எந்த வகையிலும்தானதருமங்கள் செய்ய இயலவில்லை.இப்படியிருந்தால் எனக்கு வாழ்க்கையில் என்ன புண்ணியம் ஐயாகிடக்கும்" என்றார்.அதைக்கேட்ட பெரியவர் கல கலவெனனகைத்து, கூறு கிறார்" அப்பா, இதற்காகவா கவலைப்படுகிறாய், மகனேநீ வாழ்க்கையில் யாருக்காவது தீங்கு நினைத்திருக்கிறாயா?" என்றார்.அதற்கு பெரியவர்,"ஐயா நான் மனதாலும்பிறருக்கு தீங்கு நினைத்தது இல்லை".என்றார்.கனவில் வந்தவர் சொல்கிறார்,"மகனே இவ்வுலகில் மிகச்சிறந்த தருமம் எதுவென்று உனக்குதெரியுமா,தருமங்களில் எல்லாவற்றிலும் தலைசிறந்தது,ஒருவன் தன் மனதில்எவ்விதமான களங்கமும் இல்லாதிருத்தல்தான்.இதுதான் நீ செய்யும் தான தருமங்களில் எல்லாம் முதன்மையானது.மற்றவையெல்லாம் பிறர் நம்மை பாராட்டவேண்டும் என்ற ஆரவாரத்திற்காக செய்யப்படுவதாகும்"என்று கூறி கீழ் வரும் பாடலைச்சொல்கிறார்.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற" என்று கூறிவிட்டு மறைந்தார்.பெரியவரும் தன் கவலை
நீங்கியவராக நன்றாகத்தூங்கினார்.

No comments: