Saturday, December 1, 2007

பதிவிற்கு புதியவன்‍.... அன்பிற்கு இனியவன்.

தங்கள் எண்ணங்கள் என்ற முத்துக்களால் தேன்கூடு வலைப்பதிவை அழகுடன் அலங்கரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கம்.
நான் இப்பதிவிற்கு புதியவன், ஆனாலும் தங்களின் பதிவுகளைத்தவறாமல் படித்து வருபவன். அரசியல், சமூகம், கவிதை, சினிமா‍‍.. இப்படி எதுவானாலும் நயம்பட தாங்கள் வலையில் பின்னுவதைப் பார்த்து, நாமும் ஏதேனும் எழுதவேண்டும் என்று எனக்குள் அரும்பிய எண்ணம் இன்று மலர்ந்தது. மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மொழியாலும் இனத்தாலும் நாம் தமிழர்கள் என்ற உணர்வு.. குறிப்பாக வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு, இந்த உணர்வு சற்று அதிகமாகவே இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
...தன்மானசிங்கம், பகுத்தறிவுபகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை தீயாய் உமிழும் சகோதரி..தமிழச்சி
...இந்தியாவின் மூத்த தலைவரும், தமிழர்களின் தனிப்பெருந்தலைவருமான கலைஞரின் போர்வாளாகச் சுழலும்..லக்கிலுக்
...எந்த செய்தியானாலும் சுவைபடக்கூறும்..ஓசை செல்லா
...மயிலாடுதுறையின் மணம்பரப்பி வரும்..ஆயில்யன்
...நம் நாட்டில் ஆழியெனசூழ்ந்திருக்கும் சாதியைப்பற்றி சாடும்..நடைவண்டி
...இந்தியாவும் இந்தியனும் எதிலும் தன்னிறைவு பெறவிரும்பும்..மா.சிவகுமார்
மேலும் நண்பர்..ஆசிப்மீரான்,ஜமாலன்,இட்லிவடை...இவர்களின் பதிவுகளும் மிகவும் பிடிக்கும்.
என்னைப்ப‌ற்றி: பிறந்த‌து, வ‌ளர்ந்த‌து... மூன்று ம‌த‌ங்க‌ளும் ச‌ங்கமித்து ம‌த‌ங்க‌ளின் நல்லிணக்க‌த்திற்கு சான்றாக‌ விளங்கும் நாகை மாவ‌ட்ட‌த்தில்.
இளநிலை ப‌ட்ட‌ப்ப‌டிப்பு குட‌ந்தை அர‌சின‌ர் க‌லை க‌ல்லூரி(இர‌சாய‌ன‌ம்)முதுநிலை ப‌ட்ட‌ ப‌டிப்பு ராஜதானி க‌ல்லூரி (பிர‌சிடென்சி) சென்னை
..இறுதியாண்டுமுடிப்ப‌தற்குள் தேசிய‌ம‌ய‌மான‌ வ‌ங்கியில் அலுவ‌லர் ப‌ணி.
இந்தியாவின் ப‌ல மாநில‌ங்க‌ளையும் 3 வ‌ருட‌த்திற்கு ஒருமுறை சுற்றிய‌து போதும் என்று விருப்ப‌ ஓய்வு பெற்று த‌னியார் நிறுவ‌ன‌ம் ஒன்றில் நிர்வாக‌ மேலாளராக த‌ற்போத‌ய‌ ப‌ணி.
ப‌ள்ளிப்ப‌ருவ‌ம் முத‌ல்..த‌மிழின் மீது த‌னியாத‌ப்ப‌ற்று. இளநிலைப‌ட்ட‌ ப‌டிப்பில் இர‌சாய‌ன‌த்தை த‌மிழைப் ப‌யிற்று மொழியாக‌க் கொண்டு ப‌டித்து முத‌ல் வ‌குப்பில் தேர்ச்சிபெற்று த‌மிழ‌க‌ அர‌சின் விருது வாங்கிய‌வ‌ன்
ம‌ன‌துக்கு பிடித்த‌ ம‌திப்புமிக்க‌ த‌லைவ‌ர்க‌ள்....
தந்தை பெரியார், அன்னை இந்திரா காந்தி, க‌லைஞர்.
க‌விஞர்க‌ளில்....
பார‌தியார், பார‌திதாச‌ன்.
ப‌டித்த‌தில் பிடித்த‌து....
க‌ல்கியின் பொன்னியின் செல்வ‌ன்,
அகில‌னின் பாவைவிளக்கு,
தி.ஜான‌கிராமானின் மோக‌முள், மர‌ப்ப‌சு, அம்மாவ‌ந்தாள்.
கி.ராஜ நாராயணனின் கரிச‌ல்காட்டு கடுதாசி.
நீல.ப‌த்ம‌நாப‌னின் த‌லைமுறை.
பார‌திதாச‌னின் குடும்ப‌விளக்கு.
க‌லைஞரின் பொன்ன‌ர்-ச‌ங்க‌ர்
இவை எல்லாவற்றையும் விட‌ ம‌னித‌ர்களை நேசிப்ப‌தும், நல்ல‌வ‌ர்க‌ளுட‌ன் நட்பை வ‌ளர்ப்ப‌தும் மிக‌வும் பிடிக்கும். அறிமுக‌ம் போதும் அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திப்போம்.
ந‌ன்றி. வணக்க‌ம் ந‌ண்ப‌ர்க‌ளே

2 comments:

நாஞ்சில் பிரதாப் said...

வணக்கம் சார் உங்கள் பதிவுகளை படித்தேன்.

வலைப்பதிவர்கள் மேன்மேலும் பெருகி தமிழை உலகறிய ஒளிரச் செய்வதே பதிவர்களின் நோக்கம் . அதில் தாங்களும் ஒரு பங்கு வகிக்க முன் வந்ததற்கு வலைப்பதிவர்களின் சார்பில் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
மேன்மேலும் பதிவுகளை வெளியிட எமது வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

வாழ்த்துக்களுடன் வணங்கி வரவேற்கிறேன்!