Tuesday, December 11, 2007

மலையினும் உயர்ந்தது...

பொதிகை மலையின் அடிவாரம்.இனியதென்றல் வீசும் மாலைநேரம்.வழிப்போக்கர் ஒருவர் மலையின் உயரத்தையும்,அதனழகையும் பார்த்துவியந்தவாறு வந்துக்கொண்டிருக்கிறார்.எதிரே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் எழுத்தாணிக்கொண்டு ஓலைச்சுவடியில் எழுதிக்கொண்டிருக்கிறார்.அறிவொளி சுடர்விடும் அந்தமுகத்தைப்பார்க்கிறார் வழிப்போக்கர்.தனதுசந்தேகத்தை இவரிடம் கேட்கலாம் என்றுநினைத்து தனது உரையாடலைத் துவங்குகிறார். "ஐயா வணக்கம்". "வணக்கம்; என்னப்பாவேண்டும் உனக்கு?" "ஐயா,எனக்கொரு சந்தேகம். தக்களிடம் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்தமலையைப்பாருங்கள்.விண்ணைத்தொடும் அளவுக்குஉயர்ந்து நிற்கிறது பாருங்கள்என்ன கம்பீரம்மேகங்களெல்லாம் அதன்மேலுரசிச்செல்லும் அழகுதான் என்னே ஐயா,இவ்வுலகில் மலையைவிட உயர்ந்ததும் இருக்கிறதா?" "உன்னுடைய இக்கேள்விக்கு சற்று விளக்கமாகக்கூறவேண்டியிருக்கும்.பொறுமையாகக்கேட்பாயா?""சொல்லுங்கள் ஐயா". "ஒரு ஒருபெரிய மனிதர் இருக்கிறார் என்றுவைத்துக்கொள்.மிகப்பெரும் செல்வந்தர். பெரும் உலகப் புகழ் வாய்ந்தவர்.இந்த அரசாங்கமேஅவர் சொல்படி கேட்கும்.அவர் சொல்வதை இந்நாடேகேட்கும்.ஆனால் அவர் தனக்கும்இந்த புகழுக்கும் எவ்விதசம்பந்தமுமில்லாமல்,அந்த புகழை வைத்து இறுமாப்புஅடயாமல்,எல்லா மக்களும் எப்போதும் தன்னைப்பார்த்து பேசும்படி,காட்சிக்கு எளியவனாக,கடுஞ்சொற்கள்பேசாதவனாக அடக்கத்துடன் வாழ்கின்றானோ அவனது தோற்றம் தான் இந்தமலையைவிட மிகவும் உயர்ந்ததும் கம்பீரமானதும் ஆகும்.புரிகிரறதா ?""இப்போது புரிகிறது,ஐயா அடக்கத்துடன் வாழ்பவனின் தோற்றம்தான் உயர்ந்தது என்று". வழிப்போக்கர் வணங்கி விடை பெற்று சென்றபின் பெரியவர் தன் ஓலைச்சுவடியில் இந்தக்குறளை எழுதுகிறார். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது.

6 comments:

மாதங்கி said...

வாருங்கள் தமிழ்மணத்திற்கு சீனி ஜெயபால்
உங்கள் பதிவுகாள் நன்றாக இருக்கின்றன.
வாழ்த்துக்கள்

நாஞ்சில் பிரதாப் said...

வணக்கம் சார்
திருக்குறளின் விளக்கவுரையை சற்று வித்தியாசமாக விளக்கி உள்ளீர்கள்...அருமை...

சீனி.செயபால் said...

அன்பிர்க்குஇனியவன்....


எனது முதல்பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்,என்னை தமிழ்மனம் வலைப்பதிவிற்கு அன்பான‌ வ‌ர‌வேற்பு ந‌ல்கிய‌ அன்பு உள்ளங்க‌ள‌கிய‌
ம‌திப்பிற்குறிய‌ திரு மாத‌ங்கி அவ‌ர்க‌ளுக்கும்,அன்புத‌ம்பி பிர‌தாப்குமார் ம‌ற்றும் ஆயில்ய‌ன் அவ‌ர்க‌ளுக்கும் என‌து ம‌ன‌ம் நிறைந்த‌ ந‌ன்றியினை
உரித்தாக்குகிறேன்.என‌து எண்ண‌ங்க‌ளையும் த‌ங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற அவா தங்க‌ளைப்போன்றவ‌ர்க‌ளின்
ப‌திவுக‌ளைப் ப‌டிக்கும்போது ஏற்ப‌ட்ட‌துதான்.

Voice on Wings said...

வணக்கம் செயபால், உங்கள் தனிமடல் கிடைத்தது, நன்றி. தமிழ்மணத்தில் இணைந்து விட்டீர்கள் போலிருக்கிறதே? தொடர்ந்து பதியுங்கள்.

உங்கள் திருக்குறள் விளக்கம் அருமையாக உள்ளது.

சில ஆலோசனைகள்:
- இடுகைகள் கறுப்புப் பின்னணியில் வெண்மையான எழுத்துகளோடு இருப்பதால் படிக்க சற்று கடினமாக உள்ளது. அதற்கு பதிலாக, வெண்மையான / வேறு பிரகாசமான பின்னணி நிறத்தையும், கருமையான / வேறு இருண்ட நிறத்திலான எழுத்துக்களையும் கையாண்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.
- இடுகைகளை பத்தி பிரித்து எழுதினாலும் படிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

நன்றி.

சீனி.செயபால் said...

அன்பிர்க்குஇனியவன்.........
மிகுந்த நன்றி நண்பர் வாய்ஸ் ஆப் விங்க்ஸ் ஆவாற்களே|

தங்களின் ஆலோசனைப்படியே எனது பதிவின் வண்ணத்தை மாற்றிவிட்டேன்.

சீனி.செயபால் said...

அன்பிர்க்குஇனியவன்.........
மிகுந்த நன்றி நண்பர் வாய்ஸ் ஆப் விங்க்ஸ் அவர்களே|

தங்களின் ஆலோசனைப்படியே எனது பதிவின் வண்ணத்தை மாற்றிவிட்டேன்.