Monday, December 10, 2007

ஆரம்பம் இனிமையாக இருக்கட்டும்.

வணக்கம் நண்பர்களே
அறிமுகம் முடிந்து எனது முதல் பதிவை இனிமயாக ஆரம்பிக்க விரும்புகிறேன்.அதனால் உங்களுக்கு இனிப்பு வழங்கவிரும்புகிறேன்.எல்லோரும் சாப்பிட்டதும் அதன் சுவை எப்படி என்றுசொல்லுங்கள். கேரட் அல்வா. தேவையானபொருட்கள்: புதிய‌ கேர‌ட் 1/2 கி. துருவிய‌தேங்காய்..1க‌ப் சீனி.............2க‌ப்(ருசிக்குஏற்ப‌ சேர்த்துக்கொள்ளலாம்)நெய்............1கப்.முந்திரி ப‌ருப்பு..20 கிராம். பால் 1/2 லிட்ட‌ர்.,ஏல‌க்காய் பொடி சிறித‌ளவு. செய்முறை: கேரட்டை நன்கு கழுவி துருவிக்கொள்ளவேண்டும்.முந்திரிபருப்பை சிறிதளவு நெய்விட்டு பொன்னிறமாக வ றுத்துக்கொள்ள வேண்டும்.அடிக‌ணமான‌பாத்திர‌மாக‌ இருக்க‌வேண்டும்.முந்திரி ப்ருப்பை எடுத்துவிட்டு அதேபாத்திர‌த்தில் சிறிது நெய்விட்டு தேங்காய் துருவ‌லை சிவ‌க்க‌ வறுத்துக்கொள்ள வேண்டும்.அந்த‌ தேங்காயுட‌ன் கேர‌ட் துருவ‌லையும் சேர்த்து அத்துட‌ன் பாலையும் சேர்த்து கிளறிக்கொண்டேஇருக்க‌வேண்டும்.நன்குநீர்வ‌ற்றி வ‌ந்த்ததும் சீனியைச்சேர்த்துகிளறவேண்டும்.அடிப்பிடிக்காமல் கிளறவேண்டும்.சிறிது கெட்டியாக‌ வ‌ந்த்ததும் நெய்யை சிறிது சிறிதாக‌விட்டு கிளறிக்கொண்டு இருந்தால் நெய்யெல்லாம் உறிந்த‌பின் மீண்டும் நெய்க்சிய‌த்துவ‌ங்கும்.அல்வாவும் ச‌ட்டியில்ஒட்டாம‌ல் சுருண்டு வ‌ரும்.அப்போதுஏலக்காய் பொடியைத்தூவிஇறக்கி நெய்த‌ட‌விய‌ த‌ட்டில் கொட்டி சூடாக‌ப்பறிமாறவும்.
பீட்ரூடையும் இதேமுறையில் செய்ய‌லாம்.இத‌ற்கு ஏல‌க்காபொடிக்கு ப‌திலாக‌சிறிது ரோஸ் எசன்ஸ் 4 சொட்டுக‌ள் சேர்க்க‌வேண்டும்.ஏனென்றால் பீட்ரூட்டிற்கு சிறிது கார‌மான‌ நெடி இருக்கும்.என‌வேரோஸ் எஸன்ஸ் க‌ல‌ப்ப‌தால் அந்த‌ கார‌மான நெடி இருக்காது. என்ன‌ நண்ப‌ர்க‌ளே, ரெடியா? சாப்பிட்டுவிட்டு ருசியைச் சொல்லுங்க‌ள்.

No comments: