Thursday, December 27, 2007

காலத்தினால் செய்தநன்றி

நாகையிலிருந்து சென்னை செல்லும் அரசு பேரூந்தில் சன்னலோர இருக்கைக்கிடைத்ததில் மணிவண்ணனுக்கு நிம்மதியாகஇருந்தது.இரவு 8 1/2 மணிக்கு சென்னை சென்றடையும்.அங்கிருந்து மத்திய ரயில்நிலையம் சென்று இரவு10 1/2 மணிக்கு புதுதில்லி புறப்படும் வண்டியைப்பிடிக்கவேண்டும்.பேரூந்து சென்னையை நோக்கிப்றப்பட்டதும் இவனதுநினைவுகள் பின்னோ KKI CEL KIRATHU.தனது பெற்றோர்கள் விரும்பியது போலவே அயல் நாடெல்லாம் செல்லாமல் தனதுதாய்நாட்டிலேயே தனக்கு தன் தகுதிக்கேற்பஒரு நல்ல வேலை க்கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகருந்தது.நினைவுகள்பின்னோக்கி செல்கிறது.பிளஸ்2 வகுப்பில் நாகை மாவட்டதிலேயே ஆதிதிராவிடமாணவர் பிரிவில் முதல் மாணவனாக வந்தது,அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்று தன் பள்ளியிலேயே முதலாவாதக வந்து எல்லோரது பாராட்டையும்பெற்றது,தமிழக அரசுஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ரூபாய்5000/ க்கு 6வருட தேசிய சேமிமிப்புபத்திரம் பரிசாகப்பெற்றது,தனது பள்ளியின் தலைமைஆசிரியரின் மூலமாக நாகை மாவ‌ட்ட‌த்து ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் அவனைக்க‌வுர‌வித்து ரூபாய் 5001/வெகும‌திய‌ளித்த‌து.அவ‌ன் சாதார‌ண விவ‌சாயாக்குடும்ப‌த்தைச்சேர்ந்த‌வ‌ன்.மேற்கொண்டு ப‌டிப்பைத்தொட‌ருவ‌தென்ப‌து இய‌லாத ஒன்றுதான்.இந்நிலையில் அவ‌ன‌து ப‌ள்ளியின்த‌லைமை ஆசிரிய‌ர் அவ‌னை அர‌சு வ‌ங்கிஒன்றுக்கு அழைத்துச்சென்று ,அவ‌ன‌தும‌திப்பெண்க‌ளைக்காட்டி அவ‌ன‌து நிலையை எடுத்துக்கூறினார். அந்த‌ப்ப‌ள்ளியின்த‌லைமைஆசிரிய‌ரைப்போல‌வே,அந்த‌ வ‌ங்கியின் மேலாளரும் ம‌னித‌நேய‌ம் மிக்க‌வ‌ராக இருந்த‌தால் மேற்ப‌டிப்பிற்கு தேவையான க‌ல்விக்க‌ட‌ன் உட‌னே கிடைத்த‌து.அண்ணாப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் க‌ட்டுமான‌த்துறையை விரும்பி எடுத்துப்ப‌டித்தான்.அதிலும் ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்திலேயே முத‌ல் மாணவ‌னாக தேர்ச்சிபெற்றான். இந்த ஒரு வருடத்தில் அவனுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து பல நிறுவனங்களிலிருந்தும் நல்ல ஊதியத்தில் அழைப்புகள் வந்தது.ஆனால் அவனது அப்பா வெளிநாடு அனுப்ப சம்மதிக்கவில்லை.ஒரு முறை வங்கியின் மேலாளர் அவனது அப்பாவை அழைத்து இது பற்றி பேசும்போது அவன் அப்பாகூறியதைக்கேட்டு வங்கி மேலாளரே வியந்துபோனார்."ஐயா,என் மகன் பொறியியலியல் சிறப்பாகத்தேர்ச்சி யடைந்திருப்பது தங்களின் வங்கியின் கடன் மூலம்தான்.இது இந்திய அரசு அளித்த உதவி.அதனால் அவன் உழைப்பும்,சிந்தும்வியர்வையும் இந்த நாட்டிற்குதான் சொந்தமாகவேண்டும்.அதுதான் அவன் இந்தநாட்டிற்கு செய்யும் கைம்மாறு.அதைவிட அவன் எனக்கு ஒரே மகன்.நான் நினைத்த போது அவனப்பார்க்கவேண்டும்.அவ்ன் நினைத்த போது எங்களைப்பார்க்க‌வேண்டும்.அதற்கு அவன் இந்தியாவின் எங்கோ ஒருமூலையில் வேலைப்பார்தால் போதும்.அதைவிட்டு உலகத்தின் எங்கோஒருமூலையில் இருந்துக்கொண்டு,பெற்றோர்களையும்,உறவினர்கள்,நண்பர்கள் ,பிறந்தஊர் இவற்றை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்தை மனதில் தேக்கிக்கொண்டு அவன் எனக்கு அனுப்புகின்ற பணத்தை நான் வாங்கும்போது அதில் அவனது ஏக்கம்தான்எனக்கு தெரியும்.அரைவயிறு கஞ்சி குடித்தாலும் அவன் மனைவி மக்களோடு நாங்களிருக்க வேண்டும். இதுதான் என் ஆசை"
வங்கி மேலாளர் அந்த ஏழை விவசாயின் பதிலைக்கேட்டு அசந்துபோனார்.வட்டிக்குகடன் வாங்கி தன் பிள்ளைகளை வெளிநாட்டிற்குஅனுப்பி சம்பாதிக்க நினைக்கும்பெற்றோர்களு க்கு மத்தியில் அவனது அப்பா வித்தியாசமானவராகத்தான் தெரிந்தார்.எப்படியோஅவன் அப்பாவின் விருப்பப்படியே தலை நகர் தில்லியில்,இந்தியாவின்மிகச்சிறந்த ஒரு கட்டுமானநிறுவனத்தில் வேலைக்கிடைத்துள்ளது.அவன், கட்டுமானத்துறையில் மேலும் "தரக்கட்டுப்பாடும் மத்ப்பீடும்" என்ற பிரிவில் 6 மாத‌பட்டயப்படிப்பையும் முடித்திருந்தான்.தன் வேலையின் நியமன உத்தரவை மீண்டும் ஒருமுறைப்பார்க்க வ்ரும்பினான்.தன் இருக்கைக்குமேலிருந்த பெட்டிக்குள்ளிருந்த சிறிய கோப்பை எடுத்து அதிலிருந்த தன் நியமன உத்தரவை ஆசையுடன் பார்க்கிறான்.அவனது புகைப்படம் ஒட்டி அழகாக அச்சிடப்பட்டுள்ளது. மாதஊதிய‌ம் ரூபாய் 45000/,த‌ங்கிக்கொள்ள‌ இல‌வ‌ச‌ குடியிருப்பு.குடியிருப்பிலிருந்துஅலுவ‌ல‌க‌ம் சென்றுவ‌ர‌ நிறுவ‌ன‌த்திலிருந்து இல‌வ‌ச‌
கார்வ‌ச‌தி.மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌ இருக்கிற‌து.ப‌ணியில் அம‌ர்ந்த‌தும் முத‌ல்வேலையாக அப்பாவையும், அம்மாவையும் அழைத்துவ‌ந்து தில்லி முழுவதும் சுற்றிக்காண்பிக்க‌வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.அப்ப‌டி யே இருக்கையில் சாய்ந்து நன்றாக‌த்தூங்கிப்போனான். "எல்லாரும் ஏறங்குங்க என்ற" குரல் கேட்டு சட்டென்று விழித்துக்கொன்டன் .கோயம்பேடு பஸ் நிலையம் வந்துவிட்டது .நேரத்தைப்பார்க்கிறான் .இரவு ஒனபதாகிவிட்டது.மத்திய ரயில்நிலையம் சென்று பத்தரை மணிக்கு தில்லி செல்லும் ரயிலைப்பிடித்தாகவேண்டும் .அதற்குள் பாதி பஸ் காலியாகிவிட்டது .அவசரமாக கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்குகிறான் .மத்திய ரயில்நிலையம்வருவதற்குள் மணி பத்தாகிவிட்டது . தான் செல்லவேண்டிய புகைவண்டியும் தயாராகநிற்கிறது.உணவகம் சென்று சாப்பிட்டால் நேரமாகிவிடுமென்றுபார்செலாகவாங்கிக்கொண்டு ,நடைமேடையின் இருக்கையின்மேல் அமர்ந்து பெட்டியைத்திறக்கிறான்.பயனசிஇட்டு இருந்த கோப்பைக்காணவில்லை.

கோப்பைக்காணவில்லையென்றதும் மூச்சேனின்றுவிடும்போலாகிவிட்டது.அப்போதுதான் ,ஃபைலைப்பார்த்துக்கொண்டிருக்கும்போதே பஸ்ஸில் தூங்கிப்போனது நினைவுக்கு வருகிறது.தூங்கும்போது நழுவி
இருக்கைக்குகீழேவிழுந்திருக்கவேண்டும்.அவனுக்கு என்னசெய்வதென்றேபுரியவில்லை.இதயமேநின்றுவிடும்போலிருக்கிறது.கை,கால்களெல்லாம் வெலவெலத்துப்போகிறது.தன் கவனக்குறைவை நினைத்து,தலையில் கைவைத்துக்கொண்டு அப்படியேஅமர்ந்துவிடுகிறான்.கைக்கு எட்டியது வாய்க்குஎட்டாமல் போய்விட்தேஎன்று எண்ணிக்கொண்டு நேரத்தைப்பார்க்கிறான்.புகைவண்டி புறப்படுவதற்கு இன்னும் 10 நிமிடங்களே உள்ளது.கண்ணை இருட்டிக்கொண்டு மயக்கம் வரும்போல் இருக்கிறது. அப்போது
அவ‌ன் பெய‌ரை உர‌க்க‌க் கூப்பிடுவ‌துபோலுண‌ர்ந்து மேலேபார்க்கிறான்.புகைவ‌ண்டிக‌ளின் வ‌ந்துபோகும் நேர‌த்தை அறிவிக்கும் ஒலிபெருக்கியில் த‌ன் முக‌வ‌ரியை ச்சொல்லி உட‌னேக‌ட்டுப்பாட்டு அறைக்கு வ‌ரும்படி அறிவிக்க‌ப்ப‌டுகிற‌து.க‌ட்டுப்பாட்டு அறை எங்குள்ளது என்றுகேட்டுக்கொண்டு ஓடுகிறான்.மேல்மூச்சு வாங்க‌ ஓடிச்சென்று நிலைய‌ அதிகாரியின்முன் நிற்கிறான்.அவ‌ர‌து மேஜையின்மேல் அவ‌ன‌து ஃபைல் இருக்கிற‌து. த‌ன‌து அப்பாவையொத்த வயதுடைய பெரியவர் ஒருவரும் நின்றுக்கொண்டிருக்கிறார். அவனைப்பார்த்த நிலையாதிகாரி உடனேஃபைலைத்திறந்துப்பார்த்துவிட்டுஅவனைப்பார்த்துக்கேட்கிறார். உங்கள் ஃபைல் தானா, பாருங்ககள்".வாங்கிப்பார்க்கிறான்.அவனது புகைப்படமொட்டிய பணி நியமன உத்தரவு,கல்வி மற்றும் தகுதிச்சான்றிதழ்கள்,பயணச்சீட்டு உட்பட அனைத்தும் அப்படியேஉள்ளது."இதைநீங்கள் பஸ்ஸில் தவறவிட்டுள்ளீர்கள்.தங்களின் பின்னிருக்கையில் அமர்ந்துவந்த இவர் தனது காலுக்கடியில் இந்த ஃபைலைப்பார்த்து ,நீங்கள் இங்குதான்வந்திரூக்கக்கூடும் என்று உடனே இவர் இங்கு வந்து எப்படியாவது இதைத்தங்களிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்" என்றார் இருகரம் கூப்பி அவரை வணங்குகிறான்.கண்களிரண்டிலும் கண்ணீர் நிரம்பிவழிகிறது.குனிந்து அவர் பாதம் தொட்டுவணங்கப்போனவனை அப்படியேபிடித்துக்கொள்கிறார்." தம்பி, உன்னைப்பார்த்து இந்தப்ஃபைலை உன்னிடம் எப்படியும் சேர்க்கவேண்டும் என்று நான் எடுத்த முயற்சி வீண்போகவில்லை.நீ இங்குதான் வந்திருப்பாய் என்று யூகித்துதான் இங்குவந்தேன்.இந்த‌க்கூட்ட‌த்தில் உன்னைத்தேடுவ‌து க‌டின‌ம் என்றுதான் இவ‌ர்க‌ளின் உத‌வியை நாடினேன். அவ்ர்க‌ளும் த‌க்க‌ச‌ம‌ய‌த்தில் உத‌வினார்க‌ள்.உன‌க்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம்இருக்கிற‌து.க‌வ‌ன‌மாக‌சென்று வா!"என்றார். நேர‌த்தைப்பார்க்கிறான்.ம‌ணி 10 1/2.அவ‌ன் எண்ணத்தை அறிந்த‌வ‌ராக,நிலைய‌அதிகாரி"த‌ம்பி,இவ‌ர‌து வேண்டுகோளுக்கிண‌ங்கி நீ போக‌விருக்கும் புகைவ‌ண்டியை1/2 ம‌ணி நேர‌ம் தாம‌திக்கும்ப‌டி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.எனவே நீதைரிய‌மாக‌ப்போய் வா!"என்றார்.பெரிய‌வ‌ரும் அவ‌ன‌து இருக்கைவ‌ரை வ‌ந்து அவ‌னை வாழ்த்தி சென்றுவிட்டார். புகைவ‌ண்டி மெல்ல‌ புற‌ப்ப‌டுகிற‌து;ந‌ட‌ந்த‌தெல்லாம் க‌ன‌வுபோல் இருக்கிற‌து.அந்தப்பெரிய‌வ‌ர் சென்ற‌ திசைநோக்கி வ‌ண்ங்குகிறான்.முன்பின் தெரியாத‌ த‌ன‌க்கு அந்த‌ப்பெரிய‌வ‌ர் செய்திருக்கும் உத‌வியை எண்ணிப்பார்க்கிறான்.த‌ன் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்து விட்ட‌து போல் உணர்கிறான்.ப‌ள்ளியில்த‌மிழாசிரிய‌ர்"செய் ந‌ன்றிய‌றித‌ல்" என்ற‌ அதிகார‌த்தில் சொல்லித்த‌ந்த‌ குற‌ள் நினைவுக்கு வ‌ருகிற‌து. "செய்யாம‌ல் செய்த‌ உத‌விக்கு வைய‌க‌மும் வான‌க‌மும் ஆற்ற‌ல் அரிது." ஆம்! எவ்விதமான பிரதிபலனும் கருதாமல்,தக்கசமயத்தில்,தனக்கு தொடர்பே இல்லாத, தன்னால் எந்த உதவியும் செய்யப்படாத‌ஒருவர் நமக்கு செய்யும் உதவிக்குஇந்த வையகத்தையும் வானுலகத்தையும் தானமாகக்கொடுத்தாலும் ஈடாகுமா!

4 comments:

மா சிவகுமார் said...

உள்ளத்தில் கள்ளமில்லாமல் நல்ல நோக்கத்துக்காக வாழ்பவர்களுக்கு எந்த தொல்லைகளும் பனி போல மறைந்து போகும். உலகம் முழுதும் அவர்களின் பணி நிறைவேற துணை நிற்கும்.

உருக்கிய கதை.

அன்புடன்,
மா சிவகுமார்

(பத்தி பிரித்து படிக்க எளிதாக கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் :-)

நாஞ்சில் பிரதாப் said...

திருக்குறளின் நன்றி பற்றிய அதிகாரத்தில் கூறப்படும் அனைத்து குறள்களும் மனித வாழ்க்கைகு அவசியமானது. நல்ல பதிவுக்கு நன்றி.

(சிவகுமார் சார் சொல்லியது போல பத்தியாக பிரித்து போட்டால் படிப்பதற்கு எளிதாக இருக்கும் )

அன்பத்தம்பி பிரதாப்

உதயதேவன் said...

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் மாலை வேளையில் கதை சொல்லுவார்கள்... அது நீதி,வீரம்,மானம் மற்றும் வாழ்க்கை நெறியை நம் இரத்ததில் தானே சேர்க்கும்...கதை கேட்டு காவியம் படைத்தவர்கள் அபிமன்யு, அருண்மொழி முதல் நம் காந்தி வரை உண்டு... நீதிக்கதைகள் இன்று அனைவருக்கும் மிக தேவையான ஒன்று... மிக அருமை...

Unknown said...

Keep away the summer heat with ourtechnicians Services. Book your Ac services or installation with us. Book now feel happy.
Services: refrigerated repair and maintenance, Ac repair and installation, washer repair and replace, water purifier repair and installation, chimney repair and install, flour grinder repair and service, mixer grinder repair and maintenance, stove repair and installation.
home appliance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/